
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் அவசர கால ஒருங்கிணைப்பு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படைக்களுக்கு இடையிலான போரில் இருதரப்பிலும் 2,200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.
காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா எல்லைப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிச் செய்யுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்புக் கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதிச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, போர் காரணமாக, இஸ்ரேலில் அவசரகால ஒருங்கிணைப்பு அரசு அமைக்கப்பட்டுள்ளது.
யூத மக்களின் முன்னேற்றத்திற்காக, இந்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், அவசரகால தேவையைக் கருத்தில் கொண்டு போர் மேலாண்மை அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!
போர் மேலாண்மை அமைச்சரவையில் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.