காகித பயன்பாட்டை குறைக்க உலகின் பல நாடுகள் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறிவரும் நிலையில் பின்லாந்து (FINLAND) நகரம் ஒன்று டிஜிட்டல் கல்வி முறையில் இருந்து காகித கள்வி முறைக்கு மாறி உள்ளது.
இம்மாற்றத்திற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன ?
உலகிலேயே சிறந்த கல்வி முறையை கொண்ட நாடு பின்லாந்து. நீச்சல், சாலை விதிகளை கற்றுத்தரும் அங்கன்வாடி மையம், ராங்கிங் (Ranking) முறையில்லாத பள்ளி கல்வி என கற்பித்தலில் முன்னுதாரணமாக இருந்து வருகிறது பின்லாந்து. அங்குள்ள ரிஹிமாகி (Riihimaki) நகரில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் 2018 -ல் புதுமையாக டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறின.
11 வயதிலிருந்தே கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு இலவசமாகவே லேப்டாப் கொடுத்து இதை ஊக்குவித்தனர். இந்நிலையில் ரிஹிமாகி பள்ளிகள் மீண்டும் காகிதம், பேனா என மாறி வருகின்றனர்.
லேப்டாப்பில் படிக்கும் போது சமூக வலைதளத்தை பார்ப்பது, தோழர்களுடன் அரட்டை அடிப்பது என மாணவர்களுக்கு கவன சிதறல்கள் ஏற்படுகிறது. டிஜிட்டல் கல்வி அறிமுகமான பிறகு கற்றல் திறன் குறைந்து வருகிறது என தெரிவிக்கின்றனர்.
எனவே பழைய முறைக்கு மாறி செல்போன் கொண்டு வருவதை தடுக்கவும் டிஜிட்டல் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் தனி சட்டமே இயற்றப் போகிறதாம் பின்லாந்து.