Homeசெய்திகள்உலகம்ஸ்பெயினில் நவீன செல்போன் விற்பனை கண்காட்சி

ஸ்பெயினில் நவீன செல்போன் விற்பனை கண்காட்சி

-

- Advertisement -

ஸ்பெயினில் நவீன செல்போன் விற்பனை கண்காட்சி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற நவீன செல்போன் விற்பனை கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ஸ்மார்ட் போன்கள்

ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செல்போனை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. மிகவும் தனித்துவமான உருட்டக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் சில CES மற்றும் MWC உட்பட பல்வேறு தொழில்நுட்பத்தில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடத்தப்பட்ட செல்போன் கண்காட்சியில், சீன மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றில் 2 ஸ்கிரீன்கள் உள்ளன. மேலும் செல்போனை மடித்து சிறிய அளவில் மாற்றும் வசதியும் உள்ளது. பாக்கெட் பிரெண்ட்லி சைசில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உருட்டக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய டிஸ்பிளேவுக்கு வரவேற்பு

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் போனில், டபுள் கிளிக் செய்தால் ஸ்கீரின் சைஸ், 5 இன்ச்சில் இருந்து 6 புள்ளி 5 இன்ச் ஆக விரிவடையும். போனின் பக்கவாட்டில் உள்ள ஒரு பட்டனை இருமுறை அழுத்தினால், டிஸ்பிளே செங்குத்தாக உருளும். அதாவது படம் பார்க்கும் போது ஸ்கீரின் பக்கவாட்டிலும், மெயில் பார்க்கும் போது நேர்வாட்டிலும் ஸ்கீரின் விரிவு அடையும்.

மெலிதான கைக்கு அடக்கமான, பளபளக்கும் ஸ்மார்ட் போன்கள்

ஒப்போ நிறுவனம் காட்சிப்படுத்திய ஸ்மார்ட் போனை பெண்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். அவை மெல்லிதான கைக்கு அடைக்கமான அளவும், பளபளக்கும் தோற்றத்துடன் காணப்பட்டது

MUST READ