Homeசெய்திகள்உலகம்ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி - HONOR நிறுவனம் தீர்வு!

ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி – HONOR நிறுவனம் தீர்வு!

-

ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி - HONOR நிறுவனம் தீர்வு!ஏ.ஐ.(AI) தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது நிஜம் எது பொய் எது என கணிக்க முடியாத அளவுக்கு நாம் காணும் புகைப்படங்கள் வீடியோக்கள் மாறி வருகிறது.

நடிகைகள் ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் deep fake video வெளியாகி புகார் அளிக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாகி கொண்டு இருக்கிறது.

ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி -  HONOR நிறுவனம் தீர்வு!

இதே போல ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  தெரிந்தவர்கள் போல வீடியோ காலில் பேசி மோசடி அரங்கேறி வருகிறது. இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறது சீனாவின்  ஹானர் (HONOR) நிறுவனம்.

 

 

வீடியோ காலில் பேசும் நபரின் முகம் உண்மையா அல்லது  ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் புது நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறது. இந்த வசதி செல் போன்களிளேயே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி செயலியை பதிவிறக்கவோ  அல்லது கணினியுடன் இணைக்கவோ தேவையில்லை.

மேலும் படிக்க….

காகித கள்வி முறைக்கு மாறும் பின்லாந்து – காரணம் என்ன ?

விடியோவில் தெரியும் உருவத்தை ஒவ்வொரு ஃபிரேமையும் பகுப்பாய்வு செய்து உன்மையான முகமா அல்லது  ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட விடியோவா என்பதை பயணாளிக்கு காட்டிவிடும்.

 

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளில் இருந்து இதன் மூலம் தப்பித்து கொள்ளலாம். வரும் காலாண்டிலோ அல்லது அரையாண்டிலோ இந்த வசதி ஹானர் (HONOR) செல்போனில் அறிமுகமாக இருக்கிறதாம்.

MUST READ