ஹாங்காங் செல்ல 5 லட்ச இலவச விமான டிக்கெட்
ஹாங்காங் செல்ல வெளிநாட்டினருக்கு 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க ஹாங்காய் அரசு அறிவித்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகைக்காக விதிமுறைகளை தளர்த்தும் ஹாங்காங்
தங்களது நாட்டுக்கு வருவோர் கட்டாய முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை ஹாங்காங் அரசு தளத்தியுள்ளது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இச்சலுகையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலவச விமான டிக்கெட் பெற நிபந்தனை விதிப்பு
கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டதாக கூறும் ஹாங்காங் அரசு, தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் குறைந்தபட்சம் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஹாங்காங் செல்வதற்காக இலவச டிக்கெட்டுகளை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.