Homeசெய்திகள்உலகம்பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

-

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். haulchin நகரில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையி்ட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், அதிபர் மேக்ரானை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், சாலைகளில் டயர்களை அடுக்கி வைத்து தீ வைத்து கொளுத்தினர்.

ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தீயை அணைத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேக்ரான் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்களால் பிரான்ஸ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

MUST READ