காசா நகரில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான ‘அல்-குவாத்’ மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 15வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசா நகரில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான ‘அல்- குவாத்’ மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனவே, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அங்கு தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி காசா நகரில் உள்ள அல் அகில் அராப் மருத்துவமனை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 471 பேர் கொல்லப்பட்ட நிலையில், 314 பேர் படுகாயமடைந்தனர். இதில் தற்போது வரை மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், 28 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!
இந்த சூழலில் மீண்டும் மருத்துவமனையை நோக்கி தாக்குதல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.