காசா பகுதி மீது இடைவிடாது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு பணையக் கைதிகளாக உள்ள 150- க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.
11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!
காசா மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் இஸ்ரேல், காசாவிற்குள் அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதையும் தடுத்துள்ளது. மின்சாரத்திற்கு தேவையான எரிப்பொருளையும் உள்ளே அனுமதிக்காததால் காசா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. பணயக் கைதிகள் அனைவரும், வீடு திரும்பும் வரை காசாவில் ஒரு மின்சார விளக்கும் எரியாது; ஒரு குழாயிலும் தண்ணீர் வராது; ஒரு எரிபொருள் வாகனம் கூட உள்ளே நுழைய முடியாது என இஸ்ரேலின் எரிசக்தித் துறை அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!
இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எகிப்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை சமாளிப்பதற்காக, ஹமாஸ் படையினர் தங்களது ஏவுகணைகளைச் சேமித்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.