Homeசெய்திகள்உலகம்ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!

ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!

-

 

ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!
Video Crop Image

அல் ஜசீரா தொலைக்காட்சி நேரலை செய்துக் கொண்டிருந்த போது, காசா நகரின் மையப் பகுதியில் ஏவுகணைக் குண்டுகள் மூலம் இஸ்ரேல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்தாயிரம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

தொடர்ந்து, காசா நகரில் ஏவுகணை மற்றும் டிரோன் குண்டுகளை வீசி இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடர்ந்தது. இந்த நிலையில், காசா நகரில் நிலவும் நிலை குறித்து தெரிவிக்க அல் ஜசிரா தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் நேரலையில் இணைந்தார். அப்போது, அவருக்கு பின் பகுதியில் இருந்த கட்டிடங்களில் ஏவுகணை குண்டுகளை வீசி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம் தேதி பகுதியாக ரத்து”!

இதனை சற்றும் எதிர்பாராத பெண் செய்தியாளர், அச்சத்தில் உறைந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

MUST READ