Homeசெய்திகள்உலகம்சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

-

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.

சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில் சிவப்பு, ரோஸ் நிறத்தில், மின்னலாகப் பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை நாசா படம்பிடித்துள்ளது.

இந்த வகையான மின்னல் வெளியேற்றம் (ராட்சத ஒளித்திரள்கள்), 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான ராட்சத ஒளித்திரள்கள், வழக்கமான மின்னல் தாக்குதலை விட 50 மடங்கு சக்தியைக் கொண்டுள்ளன, மேலும் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

இலங்கை-சென்னை, 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து – பயணிகள் கடும் அவதி (apcnewstamil.com)

இதுகுறித்து கூறிய விஞ்ஞானிகள், சூரிய கதிர்வீச்சு, காஸ்மிக் கதிர்வீச்சுகளால் இந்த நிகழ்வு நடத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

MUST READ