தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் பிச்சை- லக்ஷ்மி பிச்சை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் மதுரையில் பிறந்தாலும், சென்னையில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இதற்காக, அவரது குடும்பமே சென்னைக்கு இடம் பெயர்ந்தது. உயர்கல்வியை மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் ஒன்றான ஐ.ஐ.டி.யில் தொடர விரும்பினார். அதற்காக, நன்கு படிக்கத் தொடங்கினார். சுந்தர் பிச்சையின் தீவிர முயற்சியால், அவருக்கு மேற்குவங்க மாநிலம், காரக்பூரில் உள்ள காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்தது.
தனது காதலி குறித்து மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!
அதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து புறப்பட்ட சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐ.ஐ.டி.க்கு சொந்தமான விடுதியில் தங்கிப் படித்து வந்தார். பி.டெக் துறையைத் தேர்வு செய்துப் படித்த சுந்தர் பிச்சைக்கு, வேலை வாய்ப்புகள் குவிந்தனர். எனினும், எம்.எஸ். என்ற மேற்படிப்பைப் தொடர விரும்பியதால், வேலை வாய்ப்புகளை புறந்தள்ளினார்.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுக்கு சென்ற சுந்தர் பிச்சை, புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) எம்.எஸ். படித்தார். பின்னர், எம்.பி.ஏ. பட்டப்படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) முடித்தார்.
தொடர் படிப்பிற்கு பிறகு, கடந்த 2004- ஆம் ஆண்டு பிரபலமான கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைப்பது பெரியது என்றால், அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிக் கிடைப்பது அதை விட பெரியது. கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சாப்ட்வேர் பிரிவில் (Google’s client software products) தனது பணியைத் தொடங்கிய சுந்தர் பிச்சை, பின்னாளில் கூகுள் குரோம், கூகுள் மேப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் இவரது பங்கு அளப்பறியது.
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
அவரது திறமையைக் கண்டு கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வியப்படைந்தனர். அத்துடன், அவருக்கு அடிக்கடி புரொமோஷன்ஸ் மற்றும் ஊதிய உயர்வையும் அளித்து கௌரவித்தது கூகுள் நிறுவனம். அதைத் தொடர்ந்து, கடந்த 2015- ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் (Alphabet) தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். கடந்த 2020 முதல் 2022 வரை ஆண்டு ஊதியமாக சுமார 2 மில்லியன் அமெரிக்க டாலரை ஊதியமாக வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
மதுரையில் பிறந்து சென்னையில் தனது பயணத்தைத் தொடங்கி உயர்ந்த நிலைக்கு சென்ற சுந்தர் பிச்சை, இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சுந்தர் பிச்சையின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள டக்கர்… டக்கரா இருக்கானு பார்க்கலாம் வாங்க!
அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற சுந்தர் பிச்சை, தனது மனைவி அஞ்சலி பிச்சை மற்றும் இருமகள்களுடன் அங்கேயே வசித்து வருகிறார்.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை இன்று (ஜூன் 10) தனது 51-வது பிறந்தநாளை அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு ஏபிசி சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.