Homeசெய்திகள்உலகம்"ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்"- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

“ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்”- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்"- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!
Video Crop Image

ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசா பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!

பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா முனைப் பகுதியில் இருந்து செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இரு தரப்பினரும், மாறி, மாறி ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பதுங்கு குழிகள், மறைவிடங்கள் நோக்கி தீவிர தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். எந்நேரமும் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், காசாவை விட்டு மக்கள் வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களை முற்றிலும் அழிக்கப் போவதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

MUST READ