Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

-

- Advertisement -

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத அளவு பனி கொட்டித் தீர்த்தது. லெக்சிங்டன், கான்கார்ட் ஆகிய பகுதிகளில் சாலைகள் முழுவதும் பனி சூழ்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டடங்களும் பனி சூழ்ந்து காட்சி அளிக்கின்றன.

பனிப்பொழிவு தொடரும் என எச்சரிக்கை

நியூயார்க்கில் உள்ள மத்திய பூங்காவில் 1.8 அங்குலம் அளவு பனிப்பொழிவு பதிவாகியிருக்கிறது. வடகிழக்கு பகுதிகளில் 8 அங்குலத்திற்கு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த வாரம் முழுவதும் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சாலைகளில் பனிக்குவியல்களை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

MUST READ