தற்கொலை செய்துகொண்ட மகனின் உடலை 2 மாதங்கள் வீட்டிலேயே வைத்திருந்த அமெரிக்க பாடகி லிசா
எல்விஸ் பிரெஸ்லி மற்றும் பிரிஸ்ஸில்லா பிரெஸ்லி ஆகியோரின் மகளான அமெரிக்க பாடகி லிசா மேரி பிரெஸ்லி, 2020ல் தனது மகன் பெஞ்சமின் கியூஃப் இறந்த பிறகு அவரது உடலை 2 மாதங்களுக்கு தனது வீட்டிலேயே வைத்திருந்ததாக தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பெஞ்சமின் கியூஃப், 27 வயதில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, லிசா, லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டின் ஒரு தனி அறையில் ட்ரை ஐசில் 55 டிகிரி வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளார்.
அவரது குடும்பம் இறுதியில் மாலிபுவில் பெஞ்சமினுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தியது. பின்னர் அவரது தாத்தா எல்விஸ் பிரெஸ்லியுடன் கிரேஸ்லேண்டில் அவரை அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காட்டும் ரஜினி….. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…. ‘வேட்டையன்’ படத்தின் திரைவிமர்சனம்!
2022 -ல் பெஞ்சமினின் சகோதரி ரிலே ஒரு சமூக ஊடகப் பதிவில், ”நான் உன்னைப் பற்றி நினைக்காமல் ஒரு மணிநேரம் கூட இருந்ததில்லை என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீ போய் இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன, நீ இங்கு இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என எழுதியுள்ளார்.