Homeசெய்திகள்உலகம்”கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்” - டொனால்டு டிரம்ப்

”கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்” – டொனால்டு டிரம்ப்

-

”கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்” - டொனால்டு டிரம்ப்கடந்த ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை உலுக்கியதோடு மட்டுமல்லாது, அந்த நாட்டின் சமூக மற்றும் கலாசார கட்டமைப்பையும் இந்த தோட்டாக்கள் சேதப்படுத்தி உள்ளன.

அமெரிக்க நாளிதழில் ஒன்றில் வெளியான புகைப்படத்தில், முன்னாள் அதிபரின் தலைக்கு அருகே காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு தோட்டா பாய்வதைக் காண முடிகிறது.

கடவுள் அருளால் தான் உயிர் பிழைத்தேன் , தொடர்ந்து அமெரிக்காவுக்காக போராடுவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இன்று (ஜூலை 19) கட்சி கூட்டத்தில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

”கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்” - டொனால்டு டிரம்ப்

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். இதன் பின்னர் அவர் பங்கேற்ற முதல் கூட்டத்தில் பேசியதாவது:

அந்த துப்பாக்கிச்சூடு நடந்ததை நான் எண்ணி பார்க்கிறேன். என் தலையை நோக்கி துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததும் எனது காது, கைகளில் ரத்தமாக இருந்தது. நான் இறந்து விட்டேன் என நினைத்தேன், கூடியிருந்த மக்கள் எல்லாம் நான் இறந்து விட்டதாக நினைத்து பதறினர். இறந்திருந்தால் நான் இப்போது உங்கள் முன்பு நிற்க முடியாது. கடவுள் என்னோடு இருக்கிறார் . கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். தலையை சாய்த்து கொண்டதில் பெரும் ஆபத்தில் இருந்து தப்பினேன். நடந்த தாக்குதலை நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. இருப்பினும் நான் இப்போது மிக உற்சாகமாக இருக்கிறேன்.

இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா? – இன்றைய விலை என்ன?

தற்போது நடப்பது அமெரிக்க மக்களின் தேர்தல். இந்த அமெரிக்க நாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுவேன். என்னுடைய வாழ்க்கையில் போராட்டம்! போராட்டம்! தொடர்ந்து போராடுவேன் . உலகில் அமைதியை நிலைநாட்டுவோம். ஜனநாயகத்தை காத்திட பாடுபடுகிறேன் என்றார்.

தற்போது அமெரிக்காவில் அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு சரிவை சந்தித்து உள்ளது. பணவீக்கம் அதிகரித்து உள்ளது. எல்லை பாதுகாப்பு பலப்படுத்த வேண்டி உள்ளது. ஒரே நாடு என்ற அமெரிக்காவை காத்திட பாடுபடுவோம். மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் என இவ்வாறு டிரம்ப் பேசியுள்ளார்.

MUST READ