பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான்கான், மீது ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வன்முறை வெடித்ததால் அவரை கைது செய்யும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊழல் வழக்கு ஒன்றில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான்கானை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிரடியாக கைது செய்தனர். வழக்கறிஞர்கள் அறையின் கதவை உடைத்து இம்ரான்கானை பாதுகாப்புப் படை வீரர்கள் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இம்ரான்கான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாகக் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காகவே, அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் கைதைத் தடுக்க முயன்ற வழக்கறிஞர்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பல வழக்கறிஞர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் கைதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். பல்வேறு இடங்களில் பிடிஐ கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க இஸ்லாமாபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.