சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஸ்லோ பாய்சன் எனப்படும் நஞ்சு கலந்த உணவை அளித்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா
பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி சிறையில் உள்ள முன்ன பிரதமர் இம்ரான் கானை அவரது வழக்கறிஞர் நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர், “சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனரீதியான தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார். இம்ரான் கானின் நடமாட்டத்தைச் சிறை அதிகாரிகள், தடுக்கின்றனர். சிறையில் சிறிய அறைக்கு இம்ரான் கானை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். சிறையிலேயே இம்ரான் கானை கொலைச் செய்ய சதி நடப்பதாக, அவரது மனைவி கவலைத் தெரிவித்துள்ளார். இம்ரான் கானை கொடுமைப்படுத்த புதுப்புது வழிகளை சிறைத்துறை காவலர்கள் கையாளுகின்றனர்.
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது”- உயர்நீதிமன்றம் கருத்து!
அவரது நிலைக் குறித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வரும் அக்டோபர் 05- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இம்ரான் கான் பிரதமராக இருக்கும் போது பெற்ற பரிசுப் பொருட்களை கஜானாவில் சேர்க்காமல் ஏலம் விட்டு, தனது கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது முதல் தற்போது வரை இம்ரான் கான் மீது 180 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.