Homeசெய்திகள்உலகம்கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை - இந்திய தூதரகம்

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை – இந்திய தூதரகம்

-

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை - இந்திய தூதரகம்

வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா பாராளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து கென்யாவில் வன்முறை வெடித்து தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் மோதல்களும் நடந்து வருகின்றன.

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை - இந்திய தூதரகம்

நைரோபி மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையேயான வன்முறை மோதல்களுக்கு மத்தியில் கென்யா பாராளுமன்றம் ஜூன் 25 ஆம் தேதி சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா வரிகளை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை - இந்திய தூதரகம்

இதுவரை போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 5 நபர் பலியாகியிருக்கலாம் எனவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அஞ்சப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் கட்டிடத்தின் சில பகுதிகள் தீயினால் கருகியும், வீதிகளில் இருந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் முலம் ஏற்றிச்செல்லப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை - இந்திய தூதரகம்

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கென்யாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு தரவுகளின் படி கென்யாவில் சுமார் 20,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ