Homeசெய்திகள்உலகம்இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

-

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. சூடான் நாட்டின் பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் சூடானில் ஆட்சியை கைபற்றியது. இப்போது வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூடானின் தெற்கு பகுதியின் நகரமான கார்டுனில் சூடான ராணுவத்திற்கு, துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கார்டுமில் உள்ள விமான நிலையம், நகரின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் சூடானில் உள்ள இந்திய தூதரகம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அதில், சூடான் நாட்டில் துப்பாக்கி சண்டை மற்றும் மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில் சூடானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்தியர்கள் தங்கள் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கும் படியும் நிலைமை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் இந்திய தூதரகம் மறு அறிவிப்பு வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ