இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய தடை
இந்தோனேசியா நாட்டு அரசு கடந்த வாரம் இந்த தடையை விதித்துள்ளது. தடைக்கான காரணம், ஆப்பிள் நிறுவனம் இந்தோனேசியா ரூபாய் மதிப்பில் 1.71 டிரில்லியன் முதலீடு செய்வதாக சொல்லி 1.48 டிரில்லியனை மட்டுமே தற்போது முதலீடு செய்துள்ளதாம்.
முன்பு தரப்பட்ட முதலீடு சார்ந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய அழுத்தத்தை ஆப்பிள் எதிர்கொண்டுள்ளது என தெரிவிக்கின்றனர். கூடுதலாக, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் சில ஸ்மார்ட்போன்களில் குறைந்தது 40 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதியும் அங்கு அமலில் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதனை தொழில்துறை அமைச்சர் அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஐபோன் 16 மாடலை அந்நாட்டில் விற்பனை செய்வதற்கான உரிய சான்றிதழ் ஆப்பிளுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்