இஸ்ரேல் நாட்டின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது.
பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!
சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா விலகியே இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ட்ரோன்களை தாங்கள் இடைமறித்துத் தாக்கி வருவதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஜோர்டன், ஈராக், லெபனான் ஆகிய நாடுகள் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் பேசினார். ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.