Homeசெய்திகள்உலகம்ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

-

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் உட்பட அவரோடு பயணித்த 8 பேரும் விபத்தில் பலியானது ஈரானில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நாடு திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் மலை முகடுகளுக்கு நடுவே சிக்கி நொறுங்கி விபத்திற்கு உள்ளானது.

மேலும் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. விபத்திற்கு உள்ளான ஹெலிகாப்டரில் அதிபருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 8 பேர் பயணித்து உள்ளனர். விபத்து நடைபெற்ற ஈரானின் ஜோல்பா பகுதியில் கடுமையான மழை மற்றும் பனிமூட்டம் நீடித்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

இந்த விவகாரம் உலக நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், துருக்கி உட்பட சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் உதவி கரம் நீட்டின. அதிபரின் ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான தகவலை அறிந்து அந்நாட்டு மக்கள் பொது இடங்களில் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி

இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் அதிபரோடு பயணித்த வெளிவரவு அமைச்சர் உட்பட 8 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் தலைவர்களையும் இது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஈரான் அதிபர் விபத்தில் இறந்திருப்பது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

MUST READ