
காசாவில் நேற்று (அக்.10) இரவு தொடங்கிய வான்வழி தாக்குதல், சுமார் 18 மணி நேரமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை, அகதிகள் முகாம்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 கடந்திருக்கிறது. இஸ்ரேலியர்கள் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 900 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் படைகளுக்கு உதவ அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உள்ளன.
தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப் படைத் தளத்தில் ஆயுதங்களுடன் அமெரிக்க போர் விமானம் வந்துள்ளது. இந்த நிலையில், 10- க்கும் மேற்பட்ட இஸ்ரேல் விமானங்கள் ஹமாஸ் எல்லைகள் மீது குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!
இஸ்ரேல் அருகே அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹமாஸ் குழுவினருக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.