இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி கொடுத்த ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஈரானுடன் ஏமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அமெரிக்காவின் உதவியால் ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இரும்புக் கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசினேன். தாக்குதல்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம்; மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’
இதனிடையே, ஈரான் உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். உலகம் மற்றொரு போரைத் தாங்க முடியாது என ஈரானிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.