நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது. குறி வைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை அடையும் முனைப்புடன் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் ஏவப்பட்டது. எனினும், இந்த குறிக்கோள் எட்டப்பட்டதா என்பதை மிகச்சரியாக கணிக்க 30 நாட்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாதவன் – ஜோதிகாவின் சைத்தான்…. மார்ச் மாதம் ரிலீஸ்….
விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளி பேட்டரியில் மின்சாரத்தைத் தயாரிக்காதது திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் விண்கலத்தில் மின்சக்தி சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என ஜப்பானின் விண்வெளி அறிவியல் மையத்தின் தலைவர் கிட்டோஷி, விண்கலங்கள் பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியின் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பொருத்தமான இடத்தில் தரையிறங்குவது வழக்கம்.
ஜோஸ்வா இமைபோல் காக்க… பிப்ரவரியில் வெளியிட திட்டம்…
ஆனால், ஜப்பான் தேர்ந்தெடுத்த பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் விண்கலத்தைத் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஸ்லிம் விண்கலத்தின் நோக்கம், புதிய தரையிறங்கும் முறையை சோதனை செய்வது தான். இதற்கு முன் அமெரிக்கா, சோவியத் யூனியன், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களைத் தரையிறக்கி உள்ளனர்.