Homeசெய்திகள்உலகம்மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடக்கம் : வணிக நிறுவனங்கள் ஸ்தம்பித்தன

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடக்கம் : வணிக நிறுவனங்கள் ஸ்தம்பித்தன

-

 மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடக்கம் : வணிக நிறுவனங்கள் ஸ்தம்பித்தன

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் முடங்கியதால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் மேலும் அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதினால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

தெலுங்கில் அறிமுகமாகும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட இயக்குனர்!

ப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டு புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ”Blue screen of Death Error” என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டு சர்வதேச அளவில் முடங்கியுள்ளது. இந்த குளறுபடியினால் சர்வதேச அளவில் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கியது. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பெருமளவில் பாதித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணத்தினால் டில்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என தகவல் வந்துள்ளன. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பரவலான சிக்கலை தீர்க்க போதிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பும் என தெரிவித்துள்ளது.

MUST READ