அமெரிக்கா வில் நடைபெற்ற மிஸ்ஸஸ் மற்றும் மிஸ் உலக அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் மகள் இருவரும் பங்கேற்று உலக அழகி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்
திருமதி உலக அழகி போட்டிகளில் அம்மாவான பிளாரன்ஸ் டாக்டர் ஹெலன் நளினி அசத்திய நிலையில், தற்போது அவரது மகள் சரிகா சவுத்ரி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிவாகை சூடி அசத்தியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் தாய் மகள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்
சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். அம்மாவாகிவிட்டாலே வேலைக்கு செல்வதை கூட விட வேண்டிய நிலையில் பெண்களுக்கு மத்தியில் பிளாரன்ஸ் அழகுத்துறையில் சாதனை படைக்க ஆரம்பித்தார்.
எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்டவர்.
2021ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார்.
மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் இருந்து பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே தேர்வானார் . தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் Ms Spirit of world univers and Ms international world People Choice பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவரது மகள் மகள் சரிஹா செளத்ரி மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். சரிஹா செளத்ரி, சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றவர்.
ஞானவேல் யுனிவர்சல் புரொடக்ஷன் சார்பில் அமெரிக்காவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று, “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல்” என்ற பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டு இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்துள்ளார்.
இந்த அங்கீகாரம் அவரது அழகிற்கு மட்டுமல்ல, பன்முகத்தன்மை, தனித்தன்மை, சமூக சேவை உள்ளிட்டவைகளையும் கொண்டதாகும். கூடுதலாக, ஸ்டார் ஐகான் ஆஃப் இந்தியா விருதுகளின் 7வது பதிப்பில் “யுனிவர்சல் ஸ்டைல் திவா” விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சென்னை சேர்ந்த தாய் மகள் இருவரும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று தேர்வாகி சாதனை படைத்து பட்டத்தை வென்றது பாராட்டைப் பெற்றுள்ளது