பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப், மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப், கடந்த 2019- ஆம் ஆண்டு ஊழல் வழக்குகளில் சிறைச் சென்ற நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனையடுத்து, நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்ற அவர், சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
ஜாமீன் காலம் நிறைவுப் பெற்ற பின்னரும், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் தாயகம் திரும்பி இருக்கிறார். வாடகை விமானம் மூலம் அவர் குடும்பத்தினருடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெவா ஷெரீப் தற்போது பிரதமராக உள்ளார். விரைவில் அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இந்த நிலையில் தான் நவாப் ஷெரீப், பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார். பொதுத்தேர்தலில் முஸ்லீம் லீக் நவாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.