Homeசெய்திகள்உலகம்நேபாள விமான விபத்து 18 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்

நேபாள விமான விபத்து 18 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்

-

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேர் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து விபத்து. பயணத்தை தொடங்கிய சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 18 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்.

நேபாள விமான விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று நேபாள நாட்டின் பொக்காரா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

அப்போது விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து திடீரென விலகிய பயணிகள் விமானம் அருகில் இருந்த பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ