யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்-நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு
யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன!ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, Paytm செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல்.
மோசடிகளை தடுக்க ₹2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு. இதன்மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ₹2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.