Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் மீண்டும் கொரோனா

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா

-

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ! அறிகுறிகள், மாறுபாடுகள், தடுப்பூசிகள் நிலை என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் உள்ள 39 மாநிலங்களில் கோவிட்-19 நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

தட்பவெப்ப நிலையினால் ஏற்படும் மாற்றமும் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. இதனால் சுவாச நோய்களின் பரவல் விகிதங்கள் அதிகமாக கண்டறியப்படுகிறது.2024 ஆம் ஆண்டின் கோடை காலமாக இருந்த போதிலும் கோவிட்-19 இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், புதிய மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் குறைவாக உள்ளதால் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களைக் காட்டிலும் குறிப்பாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் விழிப்புடன் இருப்பது முக்கியம் என தெரிவிக்கின்றளர்.

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

கேபி.3 வகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்த போது அது வேகமாக பரவி வருகிறது எனவும் இந்த மாறுபாடு KP.2 மாறுபாட்டை முந்தியது மற்றும் அதிகரித்தும் வரும் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என கூறுகின்றனர். இந்த இரண்டு வகைகளும் கூட்டாக FliRT வகைகளாக அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சுவை மற்றும் வாசனை இழப்பு, புண் அச்சுறுத்தல், மூக்கு ஒழுகுதல், குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை COVID உடன் தொடர்புடைய பல அறிகுறிகளாக CDC பட்டியலிட்டுள்ளது.

ஜூன் 15 ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தில் 1.2% ஆக இருந்தது. வார இறுதியில் சுமார் 6.6% ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என தெிரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளின் அவசர பிரிவுக்கான வருகைகளும் 14.7% ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடுகின்றனர். தற்போது கவலையளிக்கும் அறிகுறியுடன், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என வெளியிடுகின்றனர்.

MUST READ