Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் பணிபுரிய அனுமதி

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் பணிபுரிய அனுமதி

-

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் பணிபுரிய அனுமதி

அமெரிக்காவிற்கு சுற்றுலா அல்லது வணிக விசாவில் செல்வோர், அங்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நேர்காணல் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் செல்பவர்கள் பணிபுரிய அனுமதி

ஹெச் 1 பி விசாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் நபர்கள், அங்கு பல்வேறு நிறுவனங்களிடம் வேலை பார்த்துவருகின்றனர். சுற்றுலா விசா, வணிக விசாவிலும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்றுவருகின்றனர். அவ்வாறு சுற்றுலா, வணிக விசாவில் செல்வோர் குறிப்பிட்ட காலம் மட்டுமே அங்கு வசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல முடியாது.
இந்நிலையில் அமெரிக்க விசா நடைமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.அதன்படி, சுற்றுலா மற்றும் வணிக விசாவில் அமெரிக்காவுக்கு செல்வோர் வேலைக்கு விண்ணப்பிக்கவும், நேர்காணல் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

MUST READ