Homeசெய்திகள்உலகம்குப்பை கூளமான பாரீஸ் நகரம்

குப்பை கூளமான பாரீஸ் நகரம்

-

குப்பை கூளமான பாரீஸ் நகரம்

தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரம் குப்பை கூளமானது.

பாரிஸ் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி

ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்த பிரான்ஸ் அரசு முடிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரான்ஸ் அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள், கடந்த ஒரு வாரமாக குப்பைகளை அகற்றாமல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

பாரீஸில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம்

இதனால் பாரிஸ் உட்பட பல நகரங்களில் சாலைகள் எங்கும் குப்பைகள் தேங்கி துர் நாற்றம் வீசுகிறது. பனி மற்றும் குளிர் காலம் என்பதால், நோய் தொற்று அபாயம் இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமே அல்லாமல், பணி ஓய்வு வயதை அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து மற்றும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

MUST READ