Homeசெய்திகள்உலகம்இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

-

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Former Pakistan PM Imran Khan sentenced to 3 years in jail in Toshakhana  case : The Tribune India

பாகிஸ்தானில் நவம்பர் மாத நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் லாகூரில் கைது செய்யப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இம்ரான்கான் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 70 வயதான இம்ரான்கான், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்கு வந்தவர். 2018 முதல் 2022 வரை தனது பிரதமர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த பரிசுப் பொருட்களையும், 140 மில்லியன் பாக்கிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புக்கும் அதிகமாக அரசு உடைமைகளை வாங்கவும் விற்கவும் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறும், இம்ரான் கான், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றார்.

 

MUST READ