சிவப்பு வண்ண உதட்டுச் சாயம் பூசினால் அபராதம் – கிம் ஜாங் உன்
தங்கள் நாட்டுப் பெண்கள் சிவப்பு நிற உதட்டுச் சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ள வடகொரியா அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
வடகொரியாவில் அவ்வப்போது அமல்படுத்தப்படும் வினோதமான தடைகள் பேசு பொருளாவது வழக்கம். இந்த வரிசையில் சிவப்பு நிற உதட்டுச் சாதத்தை பெண்கள் பூசிக்கொள்ள அந்த நாட்டு அதிபருக்கியும் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.
பிரபலமான பிராண்டுகளின் அலங்கார பொருட்களுக்கு ஏற்கனவே அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்தார். தற்போது சிவப்பு நிற உதட்டுச் சாயத்திற்கும் தடைவித்துள்ளதோடு இந்த தடையை மீறினால் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
சிவப்பு வண்ணம் கம்யூனிசத்தின் ஆஸ்தான நிறமாக பார்க்கப்பட்டாலும் பெண்கள் பூசிக்கொள்ளும் உதட்டுச் சாயத்தை முதலாளித்துவத்தின் சின்னமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்ப்பதாக கூறப்படுகிறது.