Homeசெய்திகள்உலகம்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!

-

 

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/transport-employees-vs-minister-speech/61443

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!

தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள ஆற்றில் நடைபெற்ற இந்த போட்டியில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு பேர் அடங்கிய குழுவாக 50- க்கும் மேற்பட்ட படகுகளில் கலந்துக் கொண்ட வீரர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியைக் காண கரையில் இருபுறமும் குவிந்திருந்த 100- க்கும் மேற்பட்ட மக்கள் கைத்தட்டியும், குரல் எழுப்பியும் வீரர்களை ஆரவாரம் செய்தனர். திருகோணமலையில் தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது படகுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு முதன்முறையாக திரிகோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று (ஜன.06) நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களும் குவிந்ததால் போட்டி விறுவிறுப்படைந்தது. பொங்கல் பண்டிகையை இலங்கையில் தமிழ் மக்கள் சுமார் ஒரு வாரத்திற்கு கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ