Homeசெய்திகள்உலகம்வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்

வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்

-

வடகொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ சந்தித்த புதின் ராணுவ ஒத்துழைப்பு, பொருளாதார, வர்த்தகம், கலாச்சாரம், விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளை பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

பிரிட்டன் பணக்காரரான இந்துஜா குடும்பத்தின் மீது வழக்கு (apcnewstamil.com)

அப்போது பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக்கின. இதையடுத்து பியாங்யாங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரஷ்யா அதிபர் புதின் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் வடகொரிய கலைஞர்கள் தங்களது திறமைகளை அரங்கேற்றினர்.

வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்

பாடல்கள், நடனம் மற்றும் ராணுவ வீரர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை புதின் வடகொரியா அதிபர் கிம் உடன் அமர்ந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் கர ஒலி எழுப்பி கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதை அடுத்து தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த ரஷ்யா அதிபர் புதின் வடகொரியாவில் இருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.

MUST READ