Homeசெய்திகள்உலகம்அடிச்சுத் தூக்கு... டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி

அடிச்சுத் தூக்கு… டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி

-

வாழ்க்கையில் காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஒருவர் கஷ்டப்படும்போது உடனிருந்தவர்கள் நம்மையும் அப்படியே விட்டுச் செல்கிறார்கள். நல்ல காலம் வரும்போது தொலைதூரத்தில் இருப்பவர்கள் கூட ஓடோடி வருவார்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கிற்கும் தற்போது மேற்சொன்ன வார்த்தைகள் பொருந்தி வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எக்ஸ் தளத்தை புறக்கணித்த விளம்பர நிறுவனங்கள் இப்போது மீண்டும் படையெடுத்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியில் எலோன் மஸ்க்கின் முயற்சிகளை தவிர்க்க இயலாது. உடல், மனம், பணம் ஆகிய மூன்று வழிகளிலும் அவர் டிரம்பிற்கு தேர்தலில் உதவினார். டிரம்ப் வென்ற பின்னர் மஸ்க்கும் அதற்குண்டான பலன்களை பெற்று வருகிறார். அவர் டிரம்ப்பால் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் எக்ஸ் தளத்தை தவிர்த்த விளம்பரதாரர்கள் இப்போது மீண்டும் விளம்பரம் செய்ய தயாராக உள்ளனர்.

அக்டோபர் 2022 -ல் மஸ்க் எக்ஸ் தளத்தை $44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அப்போது அதன் பெயர் ட்விட்டர். அதை வாங்கிய பிறகு, மஸ்க் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனார். அதன் பிறகு எக்ஸ் தளத்தில் பல மாற்றங்களைச் செய்தார். அவர் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். டிரம்ப் உட்பட பலரின் கணக்குகளை முடக்கினார். ப்ளூ டிக் சந்தா சேவை தொடங்கப்பட்டது. அதன் பெயர் ட்விட்டரில் இருந்து எக்ஸ் என மாற்றப்பட்டது.

அதிரடியாக லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!
Photo: Elon Musk

எலோன் மஸ்க்கின் பல முடிவுகளால் பல நிறுவனங்கள் கோபமடைந்தன. பிராண்ட் பாதுகாப்பை காரணம் காட்டி பல நிறுவனங்கள் விளம்பரங்களை நிறுத்தி இந்த தளத்தை புறக்கணித்தன. இந்த தளத்திலிருந்து சந்தாதாரர்கள் குறையத் தொடங்கினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தான் வாங்கிய தொகைக்கு பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்று மஸ்க் கவலைப்பட ஆரம்பித்தார்.

அமெரிக்க தேர்தலில், டிரம்ப்புக்கு மஸ்க் எக்ஸ் மூலம் நிறைய பிரச்சாரம் செய்யப்பட்டது. அமெரிக்க தேர்தல்கள் தொடர்பான பல பதிவுகள் இடம்பெற்றன. இந்த நிலையில், டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால், எக்ஸ் தளம் அவருக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும் என்று மஸ்க் நம்பினார். அது இப்போது நடந்து வருகிறது.அமெரிக்க

எலோன் மஸ்க், எக்ஸ் தளத்தில் விளம்பரங்களை மீண்டும் தொடங்கும் முக்கிய பிராண்டுகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்தில் அதை விட்டு வெளியேறிய பிராண்டுகளை வரவேற்றுள்ளார். இப்போது ஐபிஎம், டிஸ்னி, காம்காஸ்ட், டிஸ்கவரி போன்ற நிறுவனங்கள் ஒரு வருட காலப் புறக்கணிப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் மீண்டும் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளன.

 

MUST READ