சர்வதேச அளவில் மக்களை பாதித்துள்ள விலைவாசி உயர்வு
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல நாடுகளில் கடுமையாக உயர்ந்து உள்ளது.
ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தங்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்து அங்குள்ள செல்வங்களை எல்லாம் சுரண்டி சென்ற பிரிட்டன் தற்போது பொருளாதாரம் மந்த நிலையால் தள்ளாடி வருகிறது.
பிரிட்டனில் 41 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்ததுள்ளது.
உணவுப் பொருட்களை பொருத்தவரை அழுக்கும் நிலையில் உள்ள பழங்கள், காய்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அவற்றை வாங்க மக்கள் போட்டி போடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலி நாட்டில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன.
எனவே இறைச்சி முட்டை சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் தேவையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
அந்நாட்டில் கடந்த ஆண்டைவிட முட்டை விலை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது. மூட்டை ஏற்றுமதி வரத்து குறைவால் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு 30 முட்டைகள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்றொரு பக்கம் பணம் ஈட்ட பல்வேறு முயற்சிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக செல்போன், இணையதளம் மூலம் பணம் ஈட்டவே அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தென்கொரியாவில் தினசரி அலுவலகங்களில் செல்வோரும் உணவு இடைவேளையின் போது செல்போனில் விளையாடி பணம் ஈட்டி வருகின்றனர்.
ஆன்லைனில் விளையாடி பணம் பெறுவது ஆபத்தானது என்றாலும் இது போன்று பணம் ஈட்டினால் மட்டுமே விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.