Homeசெய்திகள்உலகம்ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு !

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு !

-

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு !ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள உறுப்பினர்களும் ஷிகெரு இஷிபாவை தேர்வு செய்தனர்.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று ஜப்பானியப் பிரதமராக  கிஷிடா பதவி ஏற்றார்.அவரது பதவி காலத்தில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் வெகுவாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிய மக்கள் மத்தியில்  கிஷிடாவுக்கு இருந்த ஆதரவு பேரளவில் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு

நாட்டின் தலைவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிடில் சுமுகமான, சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியாது. மக்களைக் கருத்தில்கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்தேன். அரசியல் சீர்திருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவி விலக தீர்மானித்துள்ளேன் என செய்தியாளர் கூட்டத்தில்  கிஷிடா தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவு செய்யப்படாத அரசியல் நன்கொடைகள் தொடர்பான சர்ச்சையிலும் எல்டிபி கட்சியின் பெயர் அடிபட்டது.ஊழல் தொடர்பான இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்கும் வகையில் சம்பளம் உயரவில்லை என்று ஜப்பானியர்கள் அதிருப்தி குரல் எழுப்பினர். இந்த விவகாரங்கள் அனைத்தும்  கிஷிடாவுக்கு நெருக்கடி அளித்த நிலையில், ஜப்பானியர்கள் மத்தியில் தமக்கு இருந்த ஆதரவு குறைந்ததை அடுத்து, பதவி விலக அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மோசடி குற்றச்சாட்டால் ஃபியூமோ கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ