- Advertisement -
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை
அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி திவாலான நிலையில், அதன் இங்கிலாந்து கிளை, தனியாக பிரிக்கப்பட இருக்கிறது. அமெரிக்க நிறுவன தொடர்புடைய சொத்துக்கள், கடன் நிலுவைகள் இங்கிலாந்து கிளை ஒப்பந்தத்தில் சேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 99 ரூபாய்க்கு வாங்கும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி
இதன் மூலம் சிலிக்கான் வேலி இங்கிலாந்து கிளை வர்த்தகத்தை மட்டும் தனியாக பிரித்து, ஒரு பவுண்ட் தொகைக்கு அதாவது, இந்திய மதிப்பில் 99 ரூபாய்க்கு வாங்க உள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி நிலவரப்படி சிலிக்கான் வேலி இங்கிலாந்து கிளை நிறுவனம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன்களையும், 6 லட்சம் கோடி மதிப்பிலான டெபாசிட்களையும் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 80 கோடி ரூபாய்க்கு வர்த்தக மதிப்பு இருந்ததாகவும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி கூறியுள்ளது.