Homeசெய்திகள்உலகம்சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

-

 

சிங்கப்பூர் பிரதமராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!
Photo: Singapore President

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் பலி

சிங்கப்பூரில் உள்ள இஸ்தானா மாளிகையில் நேற்று (செப்.14) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு தர்மன் சண்முகரத்னம் வருகைத் தந்தார். அப்போது, அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வந்த தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில், நாட்டின் 9-வது அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில், சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், லாரன்ஸ் வோங், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் மிகச்சிறந்த நிபுணரான அதிபர் தர்மன் சண்முகரத்னம், துணை பிரதமர், கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

‘செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்’ என அறிவிப்பு!

நடந்து முடிந்த சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம், சுமார் 70.4% வாக்குகளைப் பெற்று, வரலாற்று சாதனையுடன் அபார வெற்றி பெற்றார், குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் சுமார் 70%- க்கும் மேற்பட்டோர் தர்மனை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ