ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்
ஜப்பானில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து, தற்போது குறைந்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டும், பலர் இன்றளவும் முகக்கவசத்தை அணிந்து செல்கின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் முகக்கவசம் அணிந்ததால், அவர்கள் புன்னைகைப்பதையே, மறந்து விட்டதாகவும் கூறும் ஆசிரியர்கள், இது குறித்த விழிப்புணர்வும் மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த சைலேந்திரபாபு? முழு பின்னணி!
இது குறித்து வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நமது வாழ்க்கையை மாற்றினாலும், நல்லது எது? கெட்டது எது? என்பதனை நன்கு புரிய வைத்துள்ளது. அத்துடன், மற்றவர்களுக்கு உதவும் எண்ணங்களையும் அனைவரின் மனதில் பதிய வைத்துள்ளது என்றால் மிகையாகாது.