Homeசெய்திகள்உலகம்ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கனமழை

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கனமழை

-

- Advertisement -

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கனமழை

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.

ஸ்பெயினில் ஜூலியட் புயல் தாக்கம்; முக்கிய நகரங்கள் உறைந்த நிலையில் காட்சி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஜூலியட் புயலின் தாக்கத்தினால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் மாட்ரிட் அருகே உள்ள குவாடலஜாரா நகரம், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்துபோய் உள்ளது. முக்கிய சாலைகள், இருப்பு பாதைகள், வானுயர்ந்த கட்டடங்கள் என எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து காட்சி அளிக்கிறது. இதனால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

பனிப்புயலை தொடர்ந்து கனமழை

பனிப்புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.

MUST READ