ரோமில் போப் பிரான்சிஸ் உருக்கம்
ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்வோர் கடலில் படகு விபத்தில் சிக்கி உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய தரைக்கடல் வழியே மனித கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்
ரோம் நகரில் பொது மக்கள் மத்தியில் பேசிய போப் பிரான்சிஸ், இத்தாலி அருகே கேலாப்பிரியா கடல் பகுதியில், படகு விபத்தில் சிக்கி, 70 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை குறிப்பிட்டார். புலம் பெயர்வோரை சட்ட விரோதமாக அழைத்துச் செல்லும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை உடன் செல்லும் பயணம் துயரமாக மாறுவதாக உருக்கம்
மத்திய தரைக்கடல் வழியே நம்பிக்கையுடன் பயணம் செய்வோரின் ரத்தம் கடலை சிவப்பு நிறமாக மாற்றுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியே இடம் பெயர்வோர் நடுக்கடலில் படகு விபத்தில் சிக்கி உயிரிழப்பதை சுட்டிக்காட்டியே போப் பிரான்சிஸ் உருக்கமாக உரையாற்றினார்