அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தகவல் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அமெரிக்கன் ஃபிக்சன் படம் தட்டி தூக்கியது. THE BOY AND THE HERON திரைப்படத்திற்கான சிறந்த அனிமேஷன் விருதை Hayao Miyazaki பெற்றார்.
இந்நிலையில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க வந்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா. இவர் ஒரு நடிகரும் ஆவார். ஆஸ்கர் மேடையில் விருதை அறிவிக்க வந்த ஜான் சீனாவின் செயல் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது. அதாவது நிர்வாணமாக மேடை ஏறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அரங்கமே சில நிமிடங்கள் திகைத்துப் போயிருந்தன. வரலாற்றிலேயே முதன்முறையாக ஆஸ்கர் மேடையில் ஜான் சீனா செய்த செயல் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.