Homeசெய்திகள்உலகம்ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம்

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம்

-

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம்

ஸ்பெயினில், சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், ஆயிரக்கணக்கான மங்கைகள் கண்கவர் நடனத்துடன், இசைக் கருவிகளை இசைத்து பெண்ணுரிமையை பறைசாட்டினார்.

உலக மகளிர் தினவிழாவையொட்டி ஸ்பெயின் தலைநகர் மேட்ரீட் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பெண்ணியவாதிகள் ஆர்வமுடன் குவிந்தனர். அவர்கள் கண்கவர் நடனத்துடன், இசைக் கருவிகளை இசைத்து பெண்ணுரிமையை பறைசாட்டும் பதாகைகளை ஏந்தியப்படி ஊர்வலம் சென்றனர்.

இதில் ஆண், பெண் பாகுபாடுகளை களைதல், கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம், திருநங்கைகளுக்கு பாலினத்தை மாற்றுவதில் சட்டப் பாதுகாப்பு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியப்படி ஊர்வலம் சென்றனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி
அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

MUST READ