Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானின் டாப் 10 பணக்காரர்கள்: மொத்தமாக சேர்த்தாலும் முகேஷ் அம்பானியை நெருங்க முடியல

பாகிஸ்தானின் டாப் 10 பணக்காரர்கள்: மொத்தமாக சேர்த்தாலும் முகேஷ் அம்பானியை நெருங்க முடியல

-

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களைக் கையாள்வதில் காவல்துறையும், ராணுவமும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு தினமும் ரூ.6000 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அங்கு பணக்காரர்களுக்கு பஞ்சமில்லை. பாகிஸ்தானின் முதல் 10 பணக்காரர்களின் மொத்த மதிப்பு முகேஷ் அம்பானியின் மொத்த மதிப்பை விட குறைவு.

இவர்கள்தான் பாகிஸ்தானின் முதல் 10 பணக்காரர்கள்
1. ஷாஹித் கான்
பாகிஸ்தானின் மிகப் பெரிய பணக்காரர் ஷாகித் கான். அவர் பாகிஸ்தானில் வசிக்கவில்லை என்றாலும் அமெரிக்காவில் வசிக்கிறார். ஷாஹித் கான் ஒரு தொழிலதிபர். ஆட்டோ சப்ளையர் நிறுவனமான ஃப்ளெக்ஸ் என் கேட் உரிமையாளர். அமெரிக்க கால்பந்து அணியான ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் இவருக்கு சொந்தமானதே. ஃபோர்ப்ஸ் படி, ஷாஹித் கானின் நிகர சொத்து மதிப்பு $13.7 பில்லியன்.

2. மியான் முஹம்மது மன்ஷா
பாகிஸ்தானின் இரண்டாவது பணக்காரர் மியான் முகமது மன்ஷா. பாகிஸ்தானில் வசிக்கும் இவர் பெரிய தொழிலதிபர். பாகிஸ்தானின் எம்சிபி வங்கியின் தலைவராக உள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு அவரது குடும்பம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. அவரது மொத்த சொத்து பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, அவரது நிகர மதிப்பு 5 பில்லியன் டாலர்கள்.

3. அன்வர் பர்வேஸ்
பாகிஸ்தானின் மூன்றாவது பணக்காரர் அன்வர் பர்வேஸ். அன்வர் பிரிட்டனில் வசிக்கிறார். அவர் பெஸ்ட்வே குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். பெஸ்ட்வே பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர். அதன் வணிகம் பிரிட்டனிலும் பரவியுள்ளது. அவர் 21 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். அன்வர் பர்வேஸின் நிகர மதிப்பு 3 பில்லியன் டாலர்கள்.

4. நசீர் ஷான்
நசீர் ஷான் பாகிஸ்தானின் பெரிய தொழிலதிபர். பாகிஸ்தானின் வங்கி மற்றும் ஜவுளித் துறையில் கோலோச்சுபவர். ஷான் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. பாகிஸ்தானில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் நபர் ஷான். , நாசீரின் நிகர மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள்.

5. ரஃபீக் எம். ஹபீப்
ரஃபிக் எம். ஹபீப் பாகிஸ்தானின் ‘ஹவுஸ் ஆஃப் ஹபீப்’, ‘ஹபீப் பேங்க் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது அவர்களின் குடும்ப தொழில். 1841 ல் மும்பையில் நிறுவப்பட்ட ‘ஹவுஸ் ஆஃப் ஹபீப்’ குழும நிறுவனங்களும் இதில் அடங்கும். தற்போது இந்த குழுமத்தின் பல நிறுவனங்களின் உரிமையாளராக ரபீக் உள்ளார். அவர்களின் தொழில் டைல்ஸ், இன்சூரன்ஸ், கல்வி, மருத்துவமனை போன்றவற்றில் நீண்டுள்ளது. அவரது நிகர மதிப்பு 950 மில்லியன் டாலர்கள்.

மேற்குறிப்பிட்ட 5 பேரைத் தவிர மற்ற நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 6வது இடத்தில் தாரிக் சயீத் சைகல் (900 மில்லியன் டாலர்), யூசுப் ஃபரூக்கி 7வது இடம் (800 மில்லியன் டாலர்), சுல்தான் அலி லக்கானி 8வது இடம் (800 மில்லியன் டாலர்), சேத் அபித் ஹுசைன் 9வது இடம் (780 மில்லியன் டாலர்), 10வது இடத்தில். மஜித் பஷீரின் பெயர் ($750 மில்லியன்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முதல் 10 இடங்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் $28 பில்லியன் டாலர். இந்திய தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு சுமார் $98 பில்லியன் டாலர் ஆகும். ஆக பாகிஸ்தானின் முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து அம்பானியின் சொத்துக்களை விட மிகவும் குறைவு.

MUST READ