தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சீனா தனது நாட்டின் நெருங்கிய நண்பன் என்று தெரிவித்திருக்கிறார். தங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப உதவிச் செய்ய வேண்டும் என்றும் சீன அதிபரிடம் மாலத்தீவு அதிபர், வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மாலத்தீவில் சுற்றுலா மையம் அமைக்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவில் நிலைக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் வெளியேற, புதிதாக பதவியேற்ற மாலத்தீவு அதிபர் மொய்சு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இதில் இருந்தே இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் உரசல் தொடங்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், இந்தியா குறித்தும் மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!
இதைத் தொடர்ந்து, மாலத்தீவின் வாழ்வாதாரமாகத் திகழும் சுற்றுலாவைப் புறக்கணிக்க இந்தியாவில் இருந்து குரல்கள் எழுந்தன. இந்த சூழலில், மாலத்தீவு அதிபர், சீனாவிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கும் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.