Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்தில் வானில் வட்டமடித்த ஸ்டார்லிங் பறவைகள்

இங்கிலாந்தில் வானில் வட்டமடித்த ஸ்டார்லிங் பறவைகள்

-

இங்கிலாந்தில் வானில் வட்டமடித்த ஸ்டார்லிங் பறவைகள்

இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் வட்டமடித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கீச்சுக் குரலுடன் குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் வானில் பறந்தது

தெற்கு இங்கிலாந்தில் பனி குறைந்து, வசந்தகாலம் போன்ற சூழல் நிலவுவதால் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் படையெடுத்து உள்ளன. அங்கு உள்ள லத்தர்வெர்த் நகருக்கு மேலே ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன.

ஸ்டார்லிங் பறவைகள் வட்டமடித்தது மக்களின் கண்களுக்கு விருந்து

அதிகாலை முதல் அந்தி வரை தொடர்ச்சியாக கீச்சுக் குரலுடன் குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் வானில் பறந்தது அப்பகுதி மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. குறிப்பிட்ட பகுதியில் அச்சுறுத்தல் உள்ளது என தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதைக் கண்ட சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் பறவைகள் கூட்டத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்ததோடு, அவற்றை செல்போனில் படம் எடுத்தனர்.

MUST READ